
கேரளத்தில் ஆட்சி செய்துவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன், அவருடைய ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாகக் கூறினார் பாஜக.,வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா! அவரது இந்தப் பேச்சு, அரசியல் மட்டத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
சபரிமலை விவகாரத்தில், ஹிந்துக்களின் தனித்தன்மையை நசுக்கும் விதத்தில் செயல்பட்டு, கிறிஸ்துவ மதவெறிக்கு இரையாகி சர்ச்சுகளின் திட்டங்களுக்கு ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கேரள கம்யூனிஸ முதல்வர் பிணரயி விஜயன் என்று குற்றம் சாட்டுகின்றார்கள் கேரள இந்துக்கள். சபரிமலை ஐதிகத்தைக் காப்போம் என ஜனநாயக ரீதியில் திரண்டு, எந்த வகையில் இருந்தாலும் அந்தப் பெண்களை எப்படியாவது சபரிமலை சந்நிதியில் ஏற்றிக் காட்டுவேன் என சபதம் போட்டது போல் விடாப்பிடியாக செயல்பட்டு வரும் பிணரயி விஜயனின் சூழ்ச்சிகளை முறியடிக்க ஹிந்து இளைஞர்கள் பம்பை, பத்தனம்திட்ட, நிலக்கல் ஆகிய பகுதிகளில் திரண்டிருந்தனர். அவர்களை கேரள போலீஸை ஏவி தடியடி நடத்தி ஓட ஓட விரட்டி, அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மீது கலவரவழக்குகளை பதிவு செய்து, தேடித் தேடிக் கைது செய்து வருகிறது கேரள கம்யூனிஸ அரசு.
இந்நிலையில், கேரள அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாடம் புகட்டும் வகையிலும் மத்தியில் ஆளும் பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா, கேரளத்தில் பிணரயி விஜயன் ஆட்சியை அகற்றுவதற்கு பாஜக., பாடுபடும் என்று கூறியிருந்தார்.
ஆனால், கேரள ஆட்சியைக் கலைப்போம் என்று அமித் ஷா சொன்னதாக தகவல் பரப்பப் பட்டு, அரசியல் செய்து வருகிறார் கேரள முதல்வர் பிணரயி விஜயன்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா, பாஜக., தேசிய தலைவர் அமித் ஷாவின் குரலை பிரதிபலிக்கும் வகையில், செய்தியாளர்களிடம் பேசியபோது, “கம்யூனிஸ்ட் அரசின் கடைசி முதல்வர் பிணரயி விஜயன்; அந்த ஆட்சியை அரபி கடலில் கரைக்காமல் ஓயமாட்டேன்’ என்று ஆவேசமாக கூறியிருந்தார்.. இது அரசியல் மட்டத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



