
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் புடை சூழ வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக சிறையில் இருந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தென்மாவட்ட மக்கள் சாதீய மோதல்கள் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.



