கோவில்களை காக்க, கோவில் விக்ரஹங்களை காக்க, கோவில் நிலங்களை காக்க,
கோவில் நகைகளை காக்க, இறைவனை வேண்டி மனுவை உண்டியலில் செலுத்தும் பிரார்த்தனை நிகழ்ச்சி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கா.குற்றாலநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் முன்னணி தலைவர் சாக்ரடீஸ், மாவட்ட துணைத் தலைவர் திருமலை, மாவட்ட செயலாளர் சிவா, தென்காசி நகர தலைவர் இசக்கிமுத்து, செங்கோட்டை ஒன்றிய தலைவர் மாசானம்,
செங்கோட்டை நகர தலைவர் முருகன் துணைத் தலைவர் அருணாச்சலம், பொதுச் செயலாளர் குமார், சுரண்டை நகர செயலாளர்கள் குமார், மாடசாமி துணைத் தலைவர் ராமசாமி மேலநீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் பால்ராஜ் பைம்பொழில் நகர் தலைவர் கார்த்திக், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் நாராயணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து உண்டியலில் மனு செலுத்தினர்.
கூடியிருந்த பொதுமக்களும் பக்தர்களும் இது குறித்து விவரம் அறிந்து, தாங்களும் மனு எழுதி, உண்டியலில் செலுத்தினர்.




