சென்னை: கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தக் கண்காட்சிக்கு வந்தவண்ணம் உள்ளனர். அடையாறு, பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மாநகர சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டுள்ளன். அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மேலும் போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.