கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிடச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
மைசூர் அருகேயுள்ளது கிருஷ்ணராஜ சாகர் அணை. இதனை முற்றுகையிடுவதற்காக, ஓசூரில் இருந்து சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் ஓசூர் எல்லையில் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஓசூரில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின்னர், மைசூரை நோக்கி நடைப்பயணம் செல்வதாகக் கூறினர். தொடர்ந்து மைசூர் அருகே உள்ள கே.ஆர்.எஸ் அணையை முற்றுகையிடுவதாக அறிவித்து, நடைப்பயணம் மேற்கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நடைப்பயணத்தை, ஓசூர் பஸ் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர் போலீஸார். அப்போது போலீஸாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, போலீசார் அவர்களை தமிழக போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக, கர்நாடக-ஓசூர் எல்லைப் பகுதியான அத்திபெலே பகுதியில், காவிரி தொடர்பில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைக் கண்டித்து, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.