அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அவர் தொடர்புடைய மோசமான விடியோக்களும் புகைப்படங்களும் வாட்ஸ்அப் பில் வெளியானதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்ல வழி நடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், மூன்று ஆண்களுடன் நிர்மலா தேவி இருப்பது போன்ற ஆபாசக் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்ஆப் மூலம் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காரணம், நிர்மலா தேவி வீட்டை சோதனையிட்டு, விசாரணையில் இருக்கும்போதே, நிர்மலா தேவி தொடர்பான புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் எப்படி வெளியில் வருகின்றன என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் மண்டையை உடைத்துக் கொள்கின்றனர்.
நிர்மலா தேவியைப் பிடிக்காத அல்லது அவருக்கு எதிரான பேராசிரியர்கள் கொண்ட குழு ஒன்றுதான் இப்படி செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நிர்மலா தேவி விவகாரத்தை வைத்து திசை திருப்பி, சிலர் தப்பிக்க முயல்வதாகவும் கூறப்படுகிறது. நிர்மலா தேவியை மட்டுமே குற்றவாளியாக்கி, சம்பந்தப் பட்ட நபர்கள் தப்பிக்கக் கூட இது போன்ற வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்று சிபிசிஐடி போலீஸார் கருதுவதாகவும், அதனால் அவர்களைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.