தமிழ் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து மிகப்பெரிய லாபம் அடைந்த படங்களில் ஒன்று ‘கோலி சோடா’ இந்த படம் வெறும் ரூ.2 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பத்து மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான கோலி சோடா 2′ படத்தை முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் ரிலீசுக்கு தயாராகிய நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மே 18ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹினி, சுபிக்சா, ரேகா, இயக்குனர் கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை. விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார்.



