இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது தங்க நிறத்தில் ஒரு மாலை அணிந்து இருந்தார். அதை பார்த்த தான்பாத் ஐஐடி மாணவர் ரபேஷ் குமார் சிங், மோடிக்கு டுவிட் செய்திருந்தார். அதில், நீங்கள் பங்கேற்ற பஞ்சாயத்து ராஜ் தின உரை மிகவும் நன்றாக இருந்தது. மேலும் உரையாற்றிய போது நீங்கள் அணிந்திருந்த தங்க நிற மாலை நன்றாக இருந்தது. அதே போன்ற ஒன்று எனக்கு கிடைக்குமா? என்று தெரிவித்திருந்தார்.
அவர் டுவிட்டரில் தெரிவித்த அடுத்த நாளே பிரதமர் நரேந்திர மோடி, கடிதம் ஒன்றை அந்த மாணவருக்கு அனுப்பியதோடு, அந்த மாணவர் விரும்பிய மாலையை அவருக்கு பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.



