நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்ல சமுத்திரம் கருமனூர் கூத்தாண்டேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்தக் கோபுரத்தில் நேற்று இடி விழுந்து கோபுரத்தின் பக்கவாட்டில் 5 சிலைகள் சேதம் அடைந்தன.
இந்தக் கோவிலில் இரு தினங்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இடி விழுந்த அதிர்வில் கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கோவில், தமிழகஅமைச்சர் தங்கமணி யின் குல தெய்வ கோவில் என்பது குறிப்பிடத் தக்கது. இதனால் என்ன விதமான அசம்பாவிதம் நிகழுமோ என்று அன்பர்கள் பரிதவித்துப் போயினர்.




