யுபிஎஸ்சி தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளை தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்… என்று கோரிக்கை விடுத்துள்ளார் திமுக., செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.
மேலும் இதற்காக திமுக., பெரிய அளவில் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு…
#UPSC தேர்வுகளில் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது!பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,பழங்குடியின இளைஞர்களின் கனவுகளை தகர்க்கும் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். pic.twitter.com/lfh4iR9x18
— M.K.Stalin (@mkstalin) May 20, 2018


