- சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல்.
- ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
- சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல்.
- ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த பட்டியல் வெளியீடு #Jayalalithaa
2016 செப்.27ஆம் தேதி ஜெயலலிதா பேசிய 52 விநாடிகள் கொண்ட ஆடியோ பதிவும் வெளியிடப் பட்டுள்ளது. மூச்சுத் திணறலை உணர்ந்தது எப்படி என ஜெயலலிதா பேசிய ஆடியோ இந்த ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தார். #Jayalalithaa
ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோதே, அவருக்கு ரத்தத்தில் இருந்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருந்துள்ளது. அவர் சுமார் 20 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பலரும் சாட்சியம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் அதிக அளவில் இனிப்பு வகைகளை உட்கொண்டதாகவும், இந்த தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆடியோவில், மருத்துவ பரிசோதனைக்காக ரத்தம் எடுக்க மருத்துவர் முயற்சி செய்த போது, ரத்தம் வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என ஜெயலலிதா கூறுகிறார்.
- திரையரங்கில் விசிலடிப்பது போல மூச்சுத்திணறல் உள்ளதாக ஆடியோவில் ஜெயலலிதா கூறுகிறார்.
நவம்பர் 22ஆம் தேதியில் லட்டு, குலோப்ஜாமுன், ரசகுல்லா ஆகியவற்றை ஜெயலலிதா அதிக அளவில் உட்கொண்டதாகவும், டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழ மில்க் ஷேக்கை அவர் பருகியதாகவும் அப்பலோவின் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனால், மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவுக்கு இனிப்பு வகைகளை கொடுத்ததா, அல்லது மருத்துவர்களின் அறிவுரையை மீறி ஜெயலலிதா இனிப்பு வகைகளை கேட்டு சாப்பிட்டாரா? யார் அவருக்கு இனிப்பு வகைகளை வரவழைத்துக் கொடுத்தது? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா பேசியதாக ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆடியோ பதிவு…





