தாம்பரம் – திருநெல்வேலி அந்த்யோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
திருநெல்வேலியிருந்து மதுரை வழியாக சென்னை தாம்பரத்துக்கு தினசரி செல்லதக்க வகையில் அந்த்யோதயா ரயில் கடந்த ரயில்வே காலஅட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
இதைப்போல் கொச்சுவேலி – மங்களுர் வாரத்துக்கு இரண்டு நாள,; செங்கோட்டை – சென்னை தினசரி ஆகிய தடங்களில் அந்த்யோதயா ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்த ரயில்களில் ஒரு ரயில் கூட குமரி மாவட்டத்துக்கு அறிவிக்கப்படவில்லை. தாம்பரம் – திருநெல்வேலி அந்தோதையா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அந்த்யோதயா ரயில்கள்:-
அந்த்யோதயா ரயில்கள் முற்றிலும் முன்பதிவுசெய்யப்படாத பொதுப் பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரயில்கள் அதிக பயணிகள் நெருக்கடி கொண்ட பாதைகளில் இயக்கப்படுகிறது. இதன்படி நாகர்கோவில் – சென்னை மார்க்கம் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாக இருப்பதால் இந்த வழித்தட்த்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்களில் எல்.இ.டி திரையில் தொடருந்து நிலையங்கள், விரைவு வண்டியின் வேகம் போன்றவை காட்சிப்படுத்தப்படும்.
மேலும் தேநீர், புகைப்பிடிப்பான், சிசிடிவி கேமராக்கள காபி மற்றும் பால் வழங்கும் இயந்திரங்களும், உயிரி கழிப்பறைகள் மற்றும் கழிப்பறை உபயோக குறிகாட்டிகள் இருக்கிறது. அத்துடன் சிசிடிவி கேமராக்கள், பருகக் குடிநீர் மற்றும் கைப்பேசி சார்ஜ் புள்ளிகள் அமையவிருக்கிறது.
திருநெல்வேலி – சென்னை(தாம்பரம்) அந்த்யோதயா ரயில் 16 பெட்டிகளும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட ரயில்கள் ஆகும். கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற மற்ற ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இரண்டு முதல் நான்கு பெட்டிகள் மட்டுமே இருக்கும்.
இந்தப் பெட்டிகளில் அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்காமல் சென்னை வரை நின்று கொண்டு செல்லும் பயணிகளும் உன்டு. இந்த அந்த்யோதயா ரயில்களில் அதிக அளவில் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டு இரவு நேரத்தில் ரயில்கள் இயக்குவதால் ஏழை பயணிகள் குறைந்த கட்டணத்தில் சென்னைக்கு செல்ல முடியும்.
தாம்பரம் – திருநெல்வேலி அந்த்யோதயா ரயிலை வருகின்ற வெள்ளிகிழமை ரயில்வே அமைச்சர் தாம்பரத்தில் வைத்து துவங்கி வைக்க இருக்கிறார். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், மைலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
குமரி மாவட்ட பயணிகள் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு செல்ல தற்போது எந்த ஒரு தினசரி ரயில் சேவையும் கிடையாது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரே ஒரு வாராந்திர ரயிலாக புதுச்சேரி – கன்னியாகுமரி ரயில் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. ஆகவே இந்த அந்த்யோதயா ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த ரயிலை ரயில்வே இணை அமைச்சர் துவங்கி வைக்கும் போதே மேடையில் வைத்து கன்னியாகுமரி நீட்டிப்பு செய்து அறிவிக்க வேண்டும். இதற்கான முயற்சியை கன்னியாகுமரி எம்.பியும் மத்திய இணை அமைச்சருமான பொன்னார் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கொச்சுவேலியிருந்து மங்களுர்க்கு வாராத்துக்கு இரண்டுநாள் செல்லதக்க வகையில் அந்த்யோதயா ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.




