அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான தாமிரபரணி புஷ்கர குழுவினருக்கு தென்காசியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குரு பகவான் 12 முறை ராசியைக் கடக்கும் போது அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் மகா புஷ்கரமாகக் கருதப்படுகிறது.
துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடம் பெயர்வதையொட்டி, குரு பகவானுக்குரிய நதியான தாமிரபரணி ஆற்றில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரம் விழா நிகழாண்டில் அக். 11 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த புஷ்கர விழாவுக்காக செய்யப்பட்டுள்ள தாமிரபரணி அம்மன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, கடந்த 11 ஆம் தேதி சிருங்கேரி மடத்தில் மகா சுவாமிகள் ஆராதனை செய்து, வழியனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் செயலர் சுவாமி ராமானந்தா தலைமையிலான குழுவினர், தாமிரபரணி புஷ்கரத்துக்காக செய்யப்பட்ட விக்கிரகங்களுடன், புஷ்கர விழா சிறப்புகளை எடுத்துரைத்து பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகின்றது.
ஜூலை 11 ஆம் தேதி சிருங்கேரி மடத்தில் தொடங்கிய பயணம் கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம் வழியாக இன்று தென்காசி வந்தனர்.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன்பு வந்த இக் குழுவினருக்கு தென்காசி தாமிரபரணி புஷ்பகரம் ஒருங்கிணைப்பாளர்கள், சிவனாடியார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]



