காவிரி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

mettur dam jul21 - 2026

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆற்றில் இறங்க வேண்டாம் என ஏற்கெனவே தண்டோரா, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் ஏரியில் குளிக்கச் செல்லும் போது அதற்குரிய பாதுகாப்பான இடங்களை மட்டும் பயன்படுத்தவும். காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு யாரும் செல்ல வேண்டாம்… என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகள் உட்பட 4 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.