உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டிலேயே சிகிச்சை என்று கூறி வந்த நிலையில் கருணாநிதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது குறித்து அவரது குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திமுக., தொண்டர்கள் பெருமளவில் கோபாலபுரம் வீட்டுக்கு திரண்டு வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே தொண்டர்கள் யாரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வரவேண்டாம் என்று திமுக., தலைமை கேட்டுக் கொண்டபோதும் தொண்டர்கள் கேட்கவில்லை.
இதனிடையே, கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.தமிழரசு, க.அன்பழகன், வேல்முருகன், வைகோ, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் இன்று காலை வந்திருந்தனர்.




