குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.
இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்களும் அதிகம் வருவர் என எதிர்பார்க்கப் பட்டது. அவ்வாறே இன்று உள்ளூர் மக்கள் அதிகம் பேர் குற்றாலத்தில் குவிந்தனர். பெண்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.





