நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன; திருப்பதிக்கு கடந்த முறை நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர்; 8 வழிச்சாலை திட்டத்திற்காக 95% நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன என்றார்.
மேலும், தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உரக்கிடங்குகளில் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன என்று குறிப்பிட்டார்.




