தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று சேலத்தில் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது என்றும், பசுமை வழி சாலை திட்டம் சிறந்த திட்டம், இதனால், சேலம் மட்டுமல்லாமல் பல மாவட்டங்கள் பயனடையும். இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழி சாலை ஏற்படுத்தப்படுகிறது என்றும், இதற்கு 30 சதவிகிதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வரும், தானும் இணைந்தே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் நலமாக உள்ளதாக அவரது பார்த்த அமைச்சர்கள் தெரிவித்தனர் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்



