திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நலம் விசாரித்தார். அவருடன், வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் நலம் விசாரித்தனர்.
உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திமுக., தலைவர் கருணாநிதி. அவரைப் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று சென்னை வந்தார். பிற்பகல் 12.30 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், மு.க. ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்டோரும் இருந்தனர்.
அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தை வெளியிட்டனர். இதுவே, கருணாநிதி சிகிச்சைக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் வெளியிடப்பட்ட முதல் புகைப்படம்.




