மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் எடப்பாடியுடன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், காமராஜ், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
50 ஆண்டுகளாக தி.மு.க தலைவராக இருந்தவர் கருணாநிதி, கலைஞர் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு; கலைஞர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க தொண்டர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.




