சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.

இதற்காக வழக்கு நடைபெற்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பெரும் தயக்கத்துக்குப் பின் இந்த முடிவினை அறிவித்தனர்.
கருணாநிதி உடலை அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று துரைமுருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் பேசிய துரைமுருகன் தகவல் தெரிவித்தார்.
துரைமுருகன் கூறியதைக் கேட்டு ஸ்டாலின், ஆ.ராசா, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட தி.மு.கவினர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டனர்.