சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிகாரிகள் மாற்றம் விவரம்:
சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்
மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றம்
ராமநாபுரம் ஆட்சியராக இருந்த நடராஜன் மதுரைக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தன் நியமனம்
பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கும்,
உயர்கல்வித்துறை செயலராக மங்கத்ராம் ஷர்மா நியமனம்
சிவகங்கை ஆட்சியராக இருந்த லதா, பேரிடர் மேலாண்மை இணை செயலாளராக மாற்றம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக மாற்றம்
கடலூர் ஆட்சியராக இருந்த தண்டபாணி எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக நியமனம்
எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக இருந்த ஜெயகாந்தன் சிவகங்கை ஆட்சியராக நியமனம்.
உயர்கல்வித்துறையில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம்




