
சென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரஜினி ரசிகரான விஜய்க்கு ரஜினி மக்கள் மன்ற குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளார் ரஜினி.
தகாத உறவால், குழந்தைகளை கொன்றுவிட்டு அபிராமி சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் ஒரு பதவியும் வழங்கினார். இதனை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.



