சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா இன்னும் இரு தினங்களில் கொண்டாடப் படவுள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுதும் இந்து இயக்கங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
எந்த வித மத விழாக்களுக்கும் இல்லாத கட்டுப்பாடு, நெருக்குதல்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள்தான் வைக்க வேண்டும், இங்கே அனுமதி வாங்க வேண்டும் என்றெல்லாம் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், ஒருவரின் மத வழிபாட்டுச் சுதந்திரத்தில் கொண்டுவரப் படும் நெருக்குதல்கள் என்பதை அரசும் நீதிமன்றங்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் சிறுவர்கள் தங்கள் பகுதிகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் கூடாது என்று முதல்வரிடம் கெஞ்சுகின்ற வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
அந்த காணொளிக் காட்சி…




