தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் ஆந்திர காவல் துறையை கண்டித்து ஆர்பாட்டம்

20 அப்பாவி ஏழை கூலித் தொழிலாளர்களை முன்கூட்டியே கைதுசெய்து கட்டிபோட்டு சுட்டுப்படுகொலை செய்த ஆந்திர காவல்துறையை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தியும், படுகொலையானவர்களின் குடும்பத்தார்களுக்கு மத்திய மாநில அரசுகள் அதிகபட்ச உதவித்தொகைகள் வழங்கிடவும், உயிரிழந்த குடும்பத்தார்க்கு அரசு வேலை வழங்கிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில் காலை 11மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மாநிலத்தலைவர்  பூமொழி தலைமையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைப்பொதுச்செயலாளர் ராஜி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் விஜயகுமார், சேலம் மாவட்டத்தலைவர்  மணி, சேலம் மாவட்ட செயலாளர்  ஜெயப்பிரகாஷ், சேலம் மாநகரத்தலைவர் ராமு, மாநகர பொருளாளர்  ஆட்டோ பிரகாஷ், மாநகர துணைத்தலைவர்கள்  குமரேசன்,லட்சுமணன்,லெனின், மாநகர துணைச்செயலாளர்  மெய்யனூர் பிரகாஷ், ரவி, மாநகர நிர்வாகக்குழு உறுப்பினர்கள்  ராஜேந்திரன், முரளி, திருவெற்றி (எ) திருமுருகன், செந்தில் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்று ஆந்திர அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கும் எதிராகவும் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கடுமையான கண்டன முழக்கங்கள் எழுப்ப பட்டன.. 08-04-15 Salem Arpaattam photo 03 08-04-15 Salem Arpaattam photo 02 08-04-15 Salem Arpaattam photo 01