
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வழக்கில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி இளந்திரையன் முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.
சிபிசிஐடி தாக்கல் செய்த பதில் மனுவில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்குமாறு, முருகனும், கருப்பசாமியும் நிர்மலா தேவியிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் புகார் அளித்த கல்லூரி மாணவிகளின் மேற்படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என குறிப்பிடப் பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.



