May 28,2007- விமான நிலையத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் மு.கருணாநிதி.
அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார் முதல்வர் மு.கருணாநிதி. மிகக் கடுமையாக அவரை நோக்கி, “எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா”என்று கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
சகிப்பின்மை குறித்து கேள்வி கேட்க தி.மு.வு-க்கு அருகதையில்லை!
பா.ஜ.க மத்திய அமைச்சர் தி.மு.க வை பற்றி ஒரு கருத்தை டில்லியில் பேட்டி கொடுத்தார். அதற்கு தி.மு.க வினர் பா.ஜ.க அலுவலகத்தை தாக்கினார்கள் அப்போது கருத்து சுதந்திரம் தி.மு.கவிற்கு எங்கே போனது. இப்போது ஒரு கிறித்தவ பெண் விமானத்தில் கோஷம் போடலாமா?
நாளை ஸ்டாலின் விமானத்தில் வரும் போது குறுக்கு வழியில் தி.மு.க வின் தலைவர் ஆன ஸ்டாலின் ஒழிக என்று கோஷம் போட்டால் ஸ்டாலின் கருத்து சுதந்திரம் என்று அமைதிகாப்பாரா?( பதிவு: பானுகோம்ஸ் )
தமிழிசை பயணித்த விமானத்தில் உடன் பயணித்த பெண் பயணி தன்னுடைய பிஜேபி அரசியல் எதிர்ப்பை விமானத்திற்குள்ளேயே ஆவேசமாக கோஷமிட்டு வெளிப்படுத்தினார் – நிகழ்வு
இந்த நிகழ்வை…. கருத்து சுதந்திரம் என்றும் பார்க்கலாம். தண்டனைக்குரிய தவறான செயல் என்றும் பார்க்கலாம்.
1. கருத்து சுதந்திரம் என்று பார்ப்பவர்களுக்கு : இத்தகைய கருத்து சுதந்திரம் அனைவராலும் பின்பற்றப் படவேண்டும். தமிழகத்தில், எண்ணிலடங்கா அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அனைத்து கட்சிகளுக்கும் தலைவர்கள் என்றும் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவரும் தவறாமல் விமானத்தில் தான் பயணிக்கிறார்கள். அத் தலைவர்கள் ஒவ்வொருவரின் பயணத்தின் போதும், உடன் பயணிக்கும் பயணிகள் …
கருத்து சுதந்திரம் அடிப்படையில்.. ” ஆற்றுமணல் கொள்ளை அரசியல் கட்சி ஒழிக ” ”நில அபகரிப்பு அரசியல் கட்சி ஒழிக ” ”மக்கள் வரிப்பணத்தை சுரண்டி தங்களுக்கு சொத்து சேர்த்துக் கொண்ட அரசியல் கட்சி ஒழிக” ”ஆகப் பெரும் ஊழல் அரசியல் கட்சி ஒழிக ” ” கனிம வள கொள்ளை அரசியல் கட்சி ஒழிக” – என்று ஏகத்திற்கும் ஆவேசமாக கோஷம் போடுவதற்கு பல அடிப்படைகள் தமிழகத்தில் உள்ளது.
அரசியல்வாதிகளால் பேசப்படும் so called கருத்து சுதந்திரத்தை சோதனைக்கு உட்படுத்துவதற்கு சரியான வாய்ப்பு இது. அதனால்..இத்தகைய கருத்து சுதந்திரம் வாழ்க. 🙂
2. தண்டனைக்குரிய தவறான செயல் என்று சொல்பவர்களுக்கு : ஆம். தண்டனைக்குரிய தவறான செயல் தான். ஏனெனில்…. விமானப் பயணம், ரயில் பயணம், பேருந்து பயணம் என்று பொது மக்கள் யணிக்கும் அனைத்து பொதுப் போக்குவரத்துகளிலும்.. அரசியல் சார்பு & எதிர்ப்பாளர்கள் மட்டும் பயணிப்ப தில்லை. அரசியலை தாண்டிய அனைத்து மக்களுக்குமானது இத்தகைய பொதுப் போக்குவரத்துகள்.
அத்தகைய பயணத்தின் போது..அரசியல் நிலைப்பாடுகளை / பார்வைகளை / சார்புகளை கூச்சலிடுவது, சம்பந்தமில்லாத பிற பயணிகளுக்கு கடுமையான இடையூறை ஏற்படுத்தும் செயல். மேலும், அரசியல் சண்டைகள் ஆவேச கூச்சல்களோடு நிற்காமல்..கைகலப்புகளிலும், கடுமையான தாக்குதல்களிலும் முடியக் கூடிய வாய்ப்புகளே அதிகம். அநாகரீக அரசியல் களம் அத்தகையது.
பொது மக்கள் அச்சமின்றி இயங்கக் கூடிய / நடமாடக் கூடிய இடம் என்று எதுவுமே இல்லாமல் ..அனைத்து தளங்களையும் அரசியல் மூர்க்கம் ஆக்கிரமித்திருக்கும் நிலையில்.. தண்டனைகள் மூலமாகவே இத்தகைய அரசியலை ஒழுங்குபடுத்த இயலும்.
உலக நாடுகள் அனைத்திலும் அரசியல் இத்தகையது தான். இத்தகைய அரசியலை உலக நாடுகள் அனைத்தும் ஒழுங்கு படுத்துவதும் தண்டனைகள் மூலம் தான். முன்னது, அரசியலுக்காக அரசியல் பக்கமிருந்து பார்க்கும் கருத்து சுதந்திரம். பின்னது , பொது மக்கள் பக்கமிருந்து பார்க்கும் ”அரசியல் சாராத பொது மக்களுக்கான சுதந்திரமான பொது வெளி” குறித்தது.





Karunanidhi tamil ina kaavalan allava,avuru sonna adhu kutramilla?
தமிழ௠போராளிகள௠இதை கரà¯à®¤à¯à®¤à¯ சà¯à®¤à®¨à¯à®¤à®¿à®°à®®à¯ எனà¯à®±à®¾à®²à¯, இதன௠விலை மிக ஆபதà¯à®¤à®¾à®©à®¤à¯ ஆகà¯à®®à¯.