December 5, 2025, 2:22 PM
26.9 C
Chennai

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக உள்ளது: ராம.கோபாலன் அதிர்ச்சி

rama gopalan - 2025

சென்னை: உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள், இந்துக்களின் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக கருதப்பட்டு வருவது நீதிமன்றங்கள். அப்படி நீதிமன்றத்தை அணுகியபோது, மக்களின் உணர்வுகளையும், பாரம்பர்ய பழக்க வழக்கங்களையும் அறிந்து தீர்ப்பு கூறிய உயர்ந்த நீதிபதிகள் இருந்துள்ளனர்.

ஆனால், சமீப காலங்களில் அடுத்து அடுத்து வந்த தீர்ப்புகளான, ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது, தகாத உறவு குற்றமில்லை என்றது, ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உள்பட பல தீர்ப்புகள் இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. இப்படிப்பட்ட தீர்ப்புகள் இந்த நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் பெரும்பாலான மக்களிடம் எதிரொலிக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பது குறித்த தீர்ப்பு நேற்று வந்துள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். அதே சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணியிலிருந்து 12.30 மணி வரை வெடிக்கலாம். இப்படிப்பட்ட தீர்ப்புக்குக் காரணம், ஒன்று இவ்வழக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சரியாக கையாளவில்லை, அரசு வழக்கறிஞர்கள் மக்களின் கருத்தை, பாரம்பரியமாக தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள் குறித்து முறையாக நீதிபதிக்கு எடுத்துக் கூறவில்லை? அல்லது மாண்புமிகு நீதியரசர்களாக இருப்பவர்களுக்கு இந்நாட்டு மக்களின் உணர்வுகளை அறியாத வெளிநாட்டினரா? என்ற கேள்விகள் எழுகின்றன!

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தினங்களில், நள்ளிரவில் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது, அவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தே என்றால், இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளில் அதிகாலை நேரத்திலும் பட்டாசு வெடிக்க அனுமதித்திருக்க வேண்டாமா? கண்டிப்பாக தீபாவளி இரவு நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை! ஒரு மதத்தின் நம்பிக்கையை ஏற்போம், பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்ற இரட்டை நிலைப்பாடு, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றங்கள் இன்று, அவநம்பிக்கையின் முதலிடமாக மாறுவது ஆபத்தானது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

கிறிஸ்தவ மதத்தின் கோட்பாட்டிலோ, கிறிஸ்தவ நாடுகளிலோ கூட நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது என்பது கிடையாது. சமீப காலமாகத்தான் இவ்வழக்கம் கிறிஸ்தவர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்த உச்சநீதி மன்றம், கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் தோன்றிய நரகாசுர வதம் பற்றியும், அவனின் சம்ஹாரமான – அரக்கனின் அழிவை அப்போதிலிருந்து மக்கள் கொண்டாடி வருவதையும் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை?!

ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு குறித்து தவறுதலான கருத்துகள் பரப்பட்ட வருகின்றன. ஏதோ ஒரு வகையில் வழக்கு போடப்பட்டு வருகிறது.. குழந்தை தொழிலாளர்கள் பட்டாசு தொழிலில் உள்ளனர் அதனால் பட்டாசு வாங்குவதைத் தவிர்ப்போம், காசைக் கரியாக்கலாமா?, புகை இல்லாத தீபாவளி, கிரீன் பட்டாசு என்பன போன்ற கருத்துக்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. கிறிஸ்தவ பள்ளிகளில், தீபாவளி கொண்டாட மாட்டோம் என மாணவர்களை சபதம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள். சில வெளிநாட்டு கம்பெனிகள் இதனை விளம்பரமாக பரப்புகிறது. இவ்வாறு நடப்பதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஆண்டு பாரதத்தின் தலைநகரமான டெல்லியில் பட்டாசு விற்கத் தடையில்லை, கொண்டு வர தடை என நீதிமன்றம் கூறியது வேடிக்கையாக இருந்தது!

இவை, பட்டாசு தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி, மீண்டும் சிவகாசி போன்ற தமிழகத்தின் கடைக்கோடி நகரங்களை பாலைவனமாக்க நடக்கும் சதியோ என்ற கவலை நமக்கு வருகிறது.

ஒரிரு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுகிறது என்றால், வருடம் முழுவதும் பூச்சி கொல்லி மருந்து, கொசு மருந்து, பெட்ரோல், டீசல் புகை எனும் நச்சு மருந்தால், காற்று மாசு சூழ்ந்து வருவது குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? இவற்றோடு ஒப்பிடும்போது, பட்டாசு புகையால் வரும் மாசு குறைவு, நன்மை அதிகம் என்ற உண்மை நன்கு விளங்கும்.

எனவே, உச்சநீதி மன்றம், பட்டாசு வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சியை உடனே எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. நமது பாரம்பரிய விழாக்கள், பண்டிகைகள் குறித்து போடப்படும் வழக்குகளில் இன்னமும் அரசு வழக்கறிஞர்கள் அதிக கவனம் கொடுத்து வாதாடி மக்களின் உணர்வுகளை, உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற தீபாவளி திருநாள் எந்தவித இடர்பாடும் இல்லாமல் மக்கள் கொண்டாட, இந்து முன்னணி இயக்கம், மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories