‘லிங்கா’ வரிவிலக்கு பொதுநல வழக்கா?: நீதிமன்ற கண்டனத்தை அடுத்து வழக்கு வாபஸ்

ரஜினி நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது செல்லாது என்று கூறி, அமிர்தராஜ் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை அவர் பொது நல வழக்காக தாக்கல் செய்திருந்தார். லிங்கா என்ற பெயர் தமிழ்ப் பெயர் அல்ல என்றும், அதன் கதை தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்க வில்லை என்றும் அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது நல வழக்கு என்பதற்கு வரமுறைகள் உள்ளன. வரிவிலக்கு என்பதையெல்லாம் பொது நல மனுவில் கொண்டு வர முடியாது. வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தள்ளுபடி செய்வோம் என்று நீதிபதி கூறியதை அடுத்து, வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார். இதை அடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.