.

ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம்பெண்ணை சோமங்கலம் போலீசார் மீட்டு வேலூர் மாவட்ட போலீசாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திங்கள்கிழமை சோமங்கலம் நிலையத்திற்கு வந்து இளம் பெண் ஒருவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரனை நடத்தியதில், அவரது பெயர் அம்பிகா(19) என்பவதும் பெற்றோரை இழந்த அவர் நடுவீரப்பட்டு பகுதியில் கடந்த 2012 ஆண்டு வரை தனியார் பள்ளி ஒன்றில் 5ம் வரை படித்துள்ளார். பின்பு வாணியம்பாடி அரசு பள்ளியில் 6}7ம் வகுப்புகளை படித்துவிட்டு பின்பு 8}9ம் வகுப்புகளை சிவானந்தா குருகுலத்தில் படித்துள்ளார்.
இதையடுத்து சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அம்பிகாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 வயது எட்டியவுடன் வேலூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் இருந்து வேலூர் மகளிர் இல்லம் காப்பகத்திற்கு தையற் பயிற்சிக்காக வந்த ஷெர்லின் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அம்பிகா கடந்த 6ம் தேதி ஷெர்லினுடன் காப்பகத்தில் இருந்து தப்பி பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.
இரண்டு நாட்கள் சென்னை கோயம்பேடு மற்றும் கடற்கரை பகுதியில் இருவரும் சுற்றி வந்துள்ளனர். இதைடுத்து கடந்த 8ம் தேதி ஷெர்லின் அவரது தோழியுடன் சென்றுள்ளார். இதையடுத்து தாம்பரம் வந்த அம்பிகா அங்கிருந்து நடுவீரப்பட்டுக்கு நடத்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பசி மயக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.
இதை பார்த்த பெண்கள் சிலர் அம்பிகாவை நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள சீத்தாம்மாள் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தங்க வைத்துவிட்டு தற்போது காவல் நிலையத்தில் அம்பிகாவை ஒப்படைப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வேலூர் பாகாயம் காவல் நிலைய போலீஸôரிடம் அம்பிகாவை சோமங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் நடுவீரப்பட்டு பகுதியில் அம்பிகா இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில், பெற்றோரை இழந்த அம்பிகாவை பிடித்து போன குழந்தையில்லாத நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சிலர் அவரை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.



