விடைத்தாளை திருத்த வீட்டுக்கு எடுத்துச்சென்று வழியில் தவறவிட்ட ஆசிரியரால் பரபரப்ப

Published:

students answer paper missed - 2026

தர்மபுரி அரசு பள்ளி மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுதிய தேர்வு வினா விடை தாளை ஆசிரியர் வீட்டில் வைத்து திருத்துவதற்காக எடுத்துச் சென்றபோது பாரதிபுரத்தில் தவற விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தர்மபுரியில் உள்ள அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் பாரதிபுரம் 60 அடி ரோடு பகுதியில் விழுந்து கிடந்துள்ளது

டெம்போ ஆட்டோ ஓட்டுனர்கள் மாணவர்களின் விடைத்தாளை மீட்டு வாட்ஸ் அப்பில் படம்பிடித்து முகநூலில் பதிவிட்டுள்ளனர்

இதைக்கண்ட சம்பந்தப்பட்ட ஆசிரியர் விடைத்தாளை நேரில் வந்து பெற்றுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களின் விடைத்தாளை வீட்டிற்கு திருத்துவதற்காக எடுத்துச் சென்ற ஆசிரியர் வழியில் தவறவிட்டார் அதை எடுத்து ஆட்டோ டிரைவர் வாட்ஸ்அப்பில் உலவ விட்ட வீடியோ

மாணவர்களின் கடின உழைப்பும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அஜாக்கிரதையாக நடந்து கொண்ட ஆசிரியர் மீது துறை ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img