தொடரும் வேதனை; மழையற்ற சென்னை! புயலடித்தும் மழையில்லை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
balachandran - 2026

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து, பெய்ட்டி புயல் குறித்த தகவல்களைக் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிள்ள மத்திய மேற்கு வங்கடலில் பகுதியில் நிலவி வரும் பேய்ட்டி புயல் சென்னைக்கு கிழக்கு 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது அது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா காக்கிநாடா அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கும்.

தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்த நிலையில் அதன் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னைக்கு மழையின் வாய்ப்பு மிகவும் குறைவு. மீனவர்கள் இன்று மற்றும் நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்  பாலச்சந்திரன். 

இந்த முறை, வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் அறிவித்த போது ஆறுதலடைந்த சென்னை நகர மக்கள் தற்போது பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பருவமழை பொய்த்துப் போன நிலையில் புயல் மழையும் கைவிட்டுள்ளது. அடுத்த ஒரு வார காலத்திற்கு சென்னை நகரில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றே வானிலை ஆய்வு கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

எதிர் வரும் கோடைக்காலம் சோதனைக் காலமாகி விடக்கூடாது என்பது தான் சென்னை நகர மக்களின் தற்போதைய வேண்டுதல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.