பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
KovilpattiUpdated Anna bus station - 2026

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் 4 நாட்களுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பிற ஊர்களில் இருந்து, சென்னைக்கு 3,770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து 10,445 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

சென்னையில் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்களும் தாம்பரம் சானடோரியத்தில் 2 முன்பதிவு மையங்களும் மாதவரம் மற்றும் பூவிருந்தவல்லியில் தலா ஒரு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன

.பொங்கல் முடிந்து ஊர் திரும்பும் பயணிகளுக்காக…
ஜனவரி 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சுமார் 11,500 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.