அரசு பள்ளி மாணவர்களுடன் சமத்துவ பொங்கல்; குற்றாலம் கல்லூரி மாணவிகள் ‘சர்ப்ரைஸ்’!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை
courtallam college student pongal - 2026

செங்கோட்டை அருகே கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுடன் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் ஆண்டுத்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வெரு துறையின் சார்பில் அருகில் உள்ள கிராமத்திற்கு நேரில் சென்று சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பாட்டு வருவது வழக்கம்.

இதே போல இந்த ஆண்டு தமிழ்த்துறை உயராய்வு மையம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுடன் கொண்டாடினர்.

இந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெஸி புளோரா தலைமை தாங்கினார். கல்லூரி உதவி பேராசிரியை மகேஸ்வரி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள்கௌசல்யா , வள்ளியம்மாள் ஆகியோர் பேசினர், பேராசிரியர்கள் மகாலெட்சுமி, பாண்டிமாதேவி, பார்வதி, ஈஸ்வரி, திலகம், துர்க்காதேவி, மகேஸ்வரி, அல்தாஜ் பேகம், சுதனா, விஜில நேசமணி மற்றும் நூற்றுக்க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.