கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய பொங்கல் விழா!

Published:

karnatham rss pongal vizha - 2026

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் கர்னத்தம் கிராமத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கர்னத்தம் கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றம் கடந்த 26 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது.

இம் மன்றத்தின் 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் சுவாமி விவேகானந்தர் பிறந்த தின விழா மற்றும் பொங்கல் விளையாட்டு விழாவும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப் பட்டது. காலை முதல் மாலை வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவில் உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தை சேர்ந்த யத்தீஸ்வரி அசல பிரியா அம்பா அவர்கள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.

விழாவில் கிராம மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

செய்தி: எஸ்.ஆர்.செந்தில்குமார்
படம்: விஜய் ஆனந்த்

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img