இஸ்லாமிய மத எதிர்ப்பு கருத்துப் பதிவுகள்: பாஜக., கல்யாணராமன் கைது!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
kalyanaraman - 2026

இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்துக்களைப் பதிவு செய்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது செய்யப் பட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல்வேறு புகார்கள் கொடுக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், அந்தப் புகார்களின் அடிப்படையில், பாஜக பிரமுகர் கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே முகநூலில் இது போன்ற அவதூறுக் கருத்துகள் பதிவிட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் கல்யாணராமன் கைது செய்யப் பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.