மாவட்டம் தோறும் அம்மா ஆம்புலன்ஸ்: உடுமலை ராதாகிருஷ்ணன்!

கோவை சற்றுமுன்
amma ambulance - 2026

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் அம்மா ஆம்புலன்ஸ்கள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரைவில் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படவுள்ளது எனக் கூறினார்.

அம்மா ஆம்புலன்சில் வீட்டு பிராணிகள் முதல் அனைத்து விலங்குகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.