வெளிமாநில தொழிலாளர்கள் சென்ற பிறகும்… பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை!

Published:

madurai natham aiyer bunglow - 2026
மதுரை..நத்தம் அய்யர் பங்களா, திருப்பாலை சாலையில் நீளமான மேம்பாலம்..

தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தாலும், பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை.!

தமிழகத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலர் புலம் பெயர்ந்தாலும் கட்டுமான பணிகள் தொய்வில்லையென பல ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வரை ஆழ்துளை அமைக்கும் பணி முதல் பெரிய பாலங்கள், பல அடுக்கு மாடி கட்டிடங்கள், தங்க நாற்கர சாலை அமைக்கும் பணிகள் வரை, பீகார், ஜார்கண்ட், ஓடிசா, உத்திரபிரதேச மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள்கூறிய போது, வெளி மாநிலத் தொழிலாளர்கள் அணைவருமே, பணிகள் நடைபெறும் இடங்கள் அருகே கூடாரங்களை அமைத்து அங்கேயே தங்கி பணிகளை தொய்வின்றி செய்கின்றனர். மேலும் சம்பளத்தை பொறுத்தமட்டில், சில மாநில தொழிலாளர்களை போல நிர்பந்திப்பதில்லை. பணிக்கு நேரம் காலம் பார்ப்பதில்லை.

இதனால், அரசு திட்டப்பணிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து அரசு கொடுத்துள்ள நாட்களுக்கு முன்னதாக பணிகளை முடிப்பதால், எங்களுக்கு அழுத்தம் கிடையாது. மேலும் கட்டுமான பொருட்களை வாங்குவதில் நல்ல பயன் உள்ளது என்றனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
madurai natham road - 2026
மதுரை..நத்தம் அய்யர் பங்களா, திருப்பாலை சாலையில் நீளமான மேம்பாலம்..

தற்போது கொரோனா காரணத்தினால் பல தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்குச் சென்றாலும், இருக்கின்ற வெளி மாநிலத் தொழிலாளர்களுடன், தமிழக தொழிலாளர்களையும் ஒருங்கிணைந்து பணிகளை தொடங்கி விட்டதாகவும். நிறுத்தப்பட்ட பாலம், அடுக்கு மாடி அரசு கட்டடங்கள் கட்டும் பணி தொய்வின்றி நடைபெறும் என்றும் கூறுகின்றனர் காண்ட்ராக்டர்கள்

மதுரை நத்தம் ரோட்டிலும், மதுரை புறவழிச்சாலை பாண்டி கோயில் அருகேயும், மதுரை காளவாசலிலும் மேம்பாலம் கட்டும் பணியும் எவ்வித தொய்வுமின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

madurai road workss - 2026

அதுபோல், தமிழக அரசு தளர்வுகளை தளர்த்தியதால், மதுரை புறநகர் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை அருகே தேனூரிலிருந்து… சோழவந்தானுக்கு செல்லும் நெடுஞ்சாலைத் துறை சாலை, பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளித்தது. மேலும், தேனூரில் சிவன் கோயில் அருகே சாலையிலே பலர் கழிவு நீரை கொட்டியதால், சாலை பலத்த சிதலமடைந்து இருசக்கர வாகனங்கள் பல அடிக்கடி பழுது ஏற்பட்டது. இது குறித்து, தேனூர் ஊராட்சி நிர்வாகம், சாலையை செப்பனிடக் கோரி, சோழவந்தான் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி முழூ வீச்சில் நடைபெற்று வருகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img