தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கவராப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 அடி உயர ஈ.வே.ரா., சிலையின் கைகளில் சிலர் செருப்பு மாலை அணிவித்துள்ளனர். திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஈ.வே.ரா., சிலையின் கைத்தடியை சிலர் உடைத்து வீசியுள்ளனர். இந்தச் சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாமக., நிறுவுனர் ராமதாஸும் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில், மன நலம் பாதிக்கப்பட்ட மிருகங்கள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள்.
கடந்த 17-ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளன்று சென்னையில் அவரது உருவச்சிலை மீது செருப்பு வீசிய ஜெகதீசன் என்ற பாரதிய ஜனதா வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதேபோல், தாராபுரத்திலும் பெரியார் சிலையை அவமதித்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அதன் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது இத்தகைய நிகழ்வுகளின் பின்னணியில் வலிமையான சக்திகள் உள்ளன; இவை திட்டமிட்ட நிகழ்வுகள் என்பதையே காட்டுகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்வதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.




