ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து இன்று கடையடைப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி
ramalingam - 2026

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து வாக்குவாதம் செய்ததால் படுகொலை செய்யப் பட்ட பாமக., பிரமுகர் ராமலிங்கத்தின் படுகொலையைக் கண்டித்து இன்று அந்தப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. அது போல், மயிலாடுதுறை பகுதியிலும், இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.

மேலும், கும்பகோணம், தஞ்சையின் சில பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

posters sticking for ramalingam - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.