இன்றும் இலவசம்! மெட்ரோ ரயிலில் மகிழ்ச்சி பயணம்..!

Published:

chennai metro 2 - 2026

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த வாய்ப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை- டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி காணொளிக் காட்சி முறையில் தொடங்கி வைத்தார். இதை அடுத்து பயணிகளின் வரவேற்பைப் பெறுவதற்காக, இந்தத் தடத்தில் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய ஓரிரு நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது.

இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் நான்கரை லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்றும் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img