மோடியின் மதுரை வருகையால் திருப்புமுனை: சொல்கிறார் தமிழிசை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
tamilisai soundarrajan bjp - 2026

மதுரை: மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், பிரதமர் மோடி, மதுரை வருகைக்கு பின்னர் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, செல்வாக்கு

அதிகரித்திருக்கிறது. அதிக அளவில் உறுப்பினர்கள் பாஜக.வில் இணைந்துள்ளனர்.

ஓட்டு சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே கூட்டணி சேர்கிறோம். அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால், பாஜக.வும் தனித்து போட்டியிட தயார் என்றார்.

மேலும், நாளை ஈரோட்டிற்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வர உள்ளார்; வேலூருக்கு ரவிசங்கர் பிரசாத், திருவண்ணாமலைக்கு ஸ்மிருதி இரானி ஆகியோர் வருகை தர உள்ளனர் என்று கூறினார் தமிழிசை சௌந்தரராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.