
முந்திரி – கத்திரி துவட்டல்
தேவையானவை:
உடைத்த முந்திரி – 25 கிராம்,
பிஞ்சு நாட்டுக் கத்திரிக்காய் – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்),
தக்காளி -2 (பொடியாக நறுக்கவும்),
மல்லி (தனியா) – 2 டீஸ்பூன்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கத்திரிக்காயை நான்காகப் பிளந்து நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும் பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு… தனியா, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
ஆறிய பின் தண்ணீர்விடாமல் மிக்ஸியில் பொடிக்கவும். மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் கத்திரிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே முந்திரி, கொத்தமல்லித்தழைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
குறிப்பு: இதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.