
பாலுணர்வு மேம்பட மகிழம்பூ:
மகிழம்பூ மனதை மயக்கி புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும். நமது மனத்தில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அறவே களைந்து நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தும். மகிழ மர நிழலில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுப் பாருங்கள். அதன் சுகமே அலாதியானது.
குளுகுளு ஏசியைவிட, இயற்கை தரும் அரிய பரிசு மகிழ மரத்தின் கீழ் தூங்குவதுதான். மனம் புத்துணர்ச்சி பெறும். நமது உடம்பை இயக்கும் நாளமில்லா சுரப்பிகளை ஒழுங்காக இயங்கச் செய்யும் வல்லமை மகிழ மரத்திற்கே உண்டு.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. 20 முதல் 50 அடி உயரம் வரை வளக்கூடியது. இந்த மரத்திவளக்கூடியது. இந்த மரத்தின் பூ (மகிழம்பூ) உடல் உஷ்ணத்தை குறைக்கும், காம உணர்வை அதிகரிக்கும்
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீர்லிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டிவிடவும். பின்னர் இத்தண்ணீர்ருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த, நரம்பு மண்டலத்தை முறுக்கேற்றி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். முழுமையான பலனைப் பெற இம்முறையை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.
மகிழம் விதை, நாயுருவி விதி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலுவடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவைற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் , காலை, மாலை இருவேளையும் அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் 7 நாட்களில் வெள்ளைப்படுததல் குணமாகும். ஆண், பெண் உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்