
இன்றுடன் கத்திரி வெயில் முடிந்தது… அதே நாளில் இன்று மதியம் முதலே தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
மதுரை நகரில் முக்கிய இடங்களில் இடியூடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை நகரில் வியாழக்கிழமை மாலை பலத்த இடியூடன் கூடிய பலத்த மழை பெய்து மின் தடை ஏற்பட்டது. மதுரை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் மதுரை நகரில் மட்டும் கடுமையான வெப்பம் நிலவியது.
வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பலத்த இடியூடன் கூடிய மழை பெய்தது. இதனால் மின் சப்ளை சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.
இதேபோல், மதுரை பல நகரின் இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே, தமிழகத்தில் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடை கிறது. எனினும், பல பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், வளிமண்டல அடுக்கில் ஏற்பட்ட வெப்ப சலனத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.
பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் யாரும் அடுத்த 5 நாட்களுக்கு மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
- ரவிச்சந்திரன், மதுரை