rahul naidu - 2026

நரா லோகேஷின் தந்தை என நான் பெருமிதமாகக் கூறுவேன், உங்களால் யசோதா பென்னின் கணவர் என்று தைரியமாகக் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு! என்னால் பெருமிதமாக லோகேஷின் தந்தை எனக் கூற முடியும்? மோடியால் அப்படி ஏதாவது கூற முடியுமா என்று கேள்வி கேட்டார் சந்திரபாபு நாயுடு!

தில்லியில் அவர் நடத்திய உண்ணாவிரத தர்ணாவின் முடிவில்தான் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார் நாயுடு! நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்களை கவனத்துடன் பாதுகாக்கிறோம்; ஆனால் மோடி தன் குடும்பத்தைப் பற்றி அக்கறை கொண்டதே இல்லை என்றார் அழுத்தம் திருத்தமாக!

அண்மையில் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு வந்திருந்த பிரதமர் மோடி, ஆந்திர மாநிலத்தில் நாயுடுவின் மகன் அமைச்சர் லோகேஷ் குறித்த ஊழல்களைப் பட்டியலிட்ட மோடி, குடும்ப ஊழலை சாடிச் சென்றார். ஏற்கெனவே, கடந்த இரு வருடங்களாக, நரா லோகேஷின் ஊழல்கள் குறித்து வெளிப்படையாக பாஜக.,வினர் விமர்சித்து வந்தனர். அதனால் இரு தரப்புக்கும் இடையே மனவேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், நான்கு ஆண்டுகள் மத்திய அரசுடன் பதவியில் இருந்துவிட்டு, மகனின் ஊழல்கள் தோண்டப்படும் என்பதால், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்ற காரணத்தைச் சொல்லி, மத்திய அரசில் இருந்து வெளியேறி, மோடியைக் கண்டபடி திட்டித் தீர்த்து வருகிறார் நாயுடு.

இதனால்தான், தன் மகன் லோகேஷ் ஊழல்கள் குறித்து மோடி பேசியது, நாயுடுவுக்கு கடுப்பைக் கிளப்பியது. தில்லியில் சென்று தர்ணாவில் அமரந்தவர், தான் லோகேஷின் தந்தை என பெருமிதமாகக் கூற முடியும்? மோடியால் அப்படி ஏதாவது கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், அவரது அரசியல் எதிர்காலத்துக்கு இந்தக் கேள்வியே முடிவுரை எழுதிவிடும் என்பதை அவர் உணரவில்லை. அவர் இது குறித்துக் கூறியபோது, நான் எப்போதும் தனிப்பட்ட வகையில் தொடமாட்டேன். ஆனால் மோடி என் குடும்பத்தைப் பற்றி தனிப்பட்ட வகையில் பேசிவிட்டார். நான் என் குடும்ப உறுப்பினர்களால் பெருமிதம் அடைந்துள்ளேன். அவர்கள் என்னை நம்பி இல்லை, என் அரசியல் செல்வாக்கை நம்பி இல்லை. நான் ஒரு குடும்பஸ்தன். என் குடும்பத்துடன் நான் நேரம் செலவிடுகிறேன். மோடிக்கு குடும்பம் இல்லை. மோடி குடும்ப உறவுகள் குறித்தோ, அதன் மதிப்பு குறித்தோ எதுவும் அறிந்திருக்க மாட்டார்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

என் மனைவி புவனேஸ்வரி, ஹெரிடேஜ் நிறுவனத்தை தொடங்கி (ஹெரிடோஜ் பால் நிறுவனம்) அயராது உழைத்து தன் வணிகத்தில் முன்னேறியுள்ளார். அதற்காக அவர் என்னையும் என் அரசியல் செல்வாக்கையும் நம்பி இல்லை என்று கூறியிருந்தார்.

ஆனால், ஹெரிடேஜ் குறித்த ஊழல்கள் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. ஆந்திர மாநிலத்தின் பால்பொருள்கள் வளர்ச்சி கூட்டுறவு முகமை என்ற ஒன்றை இல்லாமல் செய்து, முதலமைச்சரின் குடும்ப நிறுவனம் என்ற வகையில் ஹெரிடேஜ் நிறுவனம் பெரும் வளர்ச்சியை அடைந்ததுடன், நிதி முறைகேடுகளையும் செய்தது. இதன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநிலத்தில் உள்ள நிலையில், அதைத் தன் பெருமிதமாகக் கூறியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

மேலும், திருப்பதி கோயிலின் பல்வேறு முறைகேடுகளில் நாயுடுவும் அவரது குடும்பமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், தற்போது மோடிக்கு எதிராகக் கிளம்பியுள்ள சந்திரபாபுவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஜகன் மோகன் ரெட்டி மேற்கொண்ட பிரசாரம் மக்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. பால் நிறுவனம், கிரானைட், பேரனுக்கு பல கோடி சொத்துகள் எல்லாம் எப்படி இந்த 10 ஆண்டுகளில் வந்தன என்ற பிரசாரம் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது. இதனால், நாயுடு வேறு வகையில் அரசியல் செய்ய நினைக்கிறார். அதனால்தான் ஆந்திர சிறப்பு அந்தஸ்து, மோடி எதிர்ப்புப் பிரசாரம் என்று இறங்கிவிட்டார்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியே, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சிதான்! என்.டி.ராமாராவ் காங்கிரஸ் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்தார். ஆனால் முறைகேடாக தன் மாமனாரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றி என்.டி.ஆர்., என்ற பெயரையே அழித்துவிட்ட சந்திரபாபு நாயுடு, தற்போது காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டணி வைத்தார். அதை கட்சிக்குள் எவரும் விரும்பவில்லை. எனவேதான் மோடி எதிர்ப்பைக் காரணம் காட்டி, கட்சியினரை திருப்திப் படுத்தி, ராகுலின் கவனத்தைப் பெற்று, தீவிர அரசியல் செய்கிறார் நாயுடு!

தில்லியில் நாயுடு கூட்டிய மோடிக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. அதில் ஆந்திரத்தை வேகவேகமாகப் பிரித்து அரசியல் செய்து, அத்தனை குழப்பங்களுக்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலும் கலந்து கொண்டார். தேவகவுடா, அரவிந்த் கேஜ்ரிவால், சரத்யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போதுதான் நாயுடு இத்தகைய மோசமான தாக்குதல் பேச்சை வெளிப்படுத்தினார். நான் லோகேஷின் அப்பா நீங்கள் யார்? என்று மோடி குறித்துக் கேட்டார், அவரது பேச்சை மேடையில் இருந்த தலைவர்கள் எவருமே ரசிக்கவில்லை.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச பாஜக., இளைஞர் அணியினர் வேறு வகையில் இதற்கு பதிலடி கொடுத்தனர். ஆந்திர மாநிலத்தில் பரவலாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், “நீங்கள் லோகேஷின் தந்தை என்பற்கு என்ன சாட்சி? நீங்கள்தான் லோகேஷின் தந்தை என்று DNA ஆய்வு செய்து நிரூபிக்க தயாரா? இல்லை உங்கள் மனைவியை சத்தியம் செய்யச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், இந்த போஸ்டர்களை காவல்துறையினர் கிழித்து வருகின்றனர். மேலும் ஒட்டியவர்கள், அச்சடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

ALSO READ:  புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

ஆனால் இப்போது நாயுடுவுக்கு இதுவே எதிராக மாறியுள்ளது. ஊழல் செய்வதற்காகவே குடும்பத்தை வளர்த்து வைத்திருக்கிற குடும்பக் கட்சியான தெலுங்கு தேசம் எங்கே…? குடும்பத்தை தன் அரசியலுக்குள் வரவிடாமல், தன் இயல்பான சந்தோஷங்களையும் இழந்து, நாட்டுக்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஒரு நாள் கூட விடுப்பே எடுக்காமல் உழைத்து வரும் மோடி எங்கே?! என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது பதவியால் .தன் சொந்த தலைமுறைக்கோ, தன் குடும்பத்துக்கோ சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாததால், மோடியால் ஊழலற்ற நேர்மையான ஏழைகளுக்கு பயனுள்ள திட்டங்களைத் தீட்டும் வகையில் ஆட்சியைக் கொடுக்க முடிகிறது என்றும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இப்போது நாயுடுவுக்கு அவரது பேச்சு அவருக்கே வினையாகிவிட்டது!

WhatsApp Image 2019 02 12 at 23.02.00 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending