உச்சகட்டத்தில் கரூர் திமுக.,வினர் ரவுடியிஸம்! வேடிக்கை பார்த்த போலீஸ்! வேதனையில் பாஜக.,!

Published:

karur bjp protest - 2026

கரூர் : பிரதமர் மோடி மற்றும் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோரின் சுவர் விளம்பரப்படத்தினை அழித்த திமுக வினர் விவகாரத்தில், அமைதியான முறையில் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை! இதை அடுத்து திமுக வினரின் சுவர் விளம்பரத்தினை அழிக்க முயன்ற பாஜக வினர் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். இதனால் திடீர் சாலைமறியல் மற்றும் நான்கு வழிச் சாலைகளில் நான்கு வழிகளிலும் சாலைமறியலில் பாஜக.,வினர் ஈடுபட்டனர். இதனால் கரூர் நகரமே ஸ்தம்பித்தது.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் அமைந்துள்ள கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச் சுவரில், கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக ஏற்கனவே பாஜக இடம்பிடித்த சுவர் விளம்பரத்தின் மீது, அதுவும் பாஜக எழுதிய விளம்பரத்தின் மீது திமுக வினர் அழித்த சம்பவத்தினை அடுத்து பாஜக – திமுக வினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து காவல்துறையினர் உதவியுடனே, அதே சுவரில் இருந்த பாஜக சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதினர். காரணம் கோவை மற்றும் சென்னையில் மட்டுமே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி என்றாவது ஒரு நாள் கரூர் வந்தால் இங்கு எதிர்புறம் உள்ள பயணியர் மாளிகையில் தான் தங்குவார். ஆகவே திமுக வின் விளம்பரம் இருக்க வேண்டுமென்று காரணம் காட்டி திமுக சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இது தொடர்பாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அன்று இரவே கரூரில் பல்வேறு இடங்களில் பாஜக.,வினர் எழுதி இருந்த சுவர் விளம்பரங்களில் பாரத பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றியும் அழிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் போலீசாரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், போலீசார் 3 நாட்களுக்கு மேலாகியும் மெத்தனமாக இருந்ததுடன், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் காரணத்தினால் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எந்த வித அனுமதியும் வாங்காமல், எழுத்தப்பட்டிருந்த திமுகவின் சுவர் விளம்பரத்தை அழிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது, போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பாஜகவினர் திமுகவினரின் சுவர் விளம்பரத்தை அழித்தனர்.

பலரை தடுத்து நிறுத்திய போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக நிர்வாகிகள், பாரத பிரதமர் மோடி அவர்களின் படத்தினை அழித்து விட்டு, திமுக வின் சுவர் விளம்பரம் ஒரு கேடா ? என்று கூறி இரண்டு நபர்கள் கருப்பு பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு போய் திமுக சுவர் விளம்பரத்தில் ஊற்றி அழித்தனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், அவர்களை விடுவிக்குபடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டுமே துணைபோகும் காவல்துறையினர் ஒழிக என்று ஒருவர் கோஷம் போட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கே திரண்டிருந்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட பாஜக.,வினர் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அப்போது திமுக சுவர் விளம்பரம் மீது பெயிண்ட் ஊற்றி அழித்த இருவரையும், தனியாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 3 பேரையும் விடுவிக்கும்படி போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், போலீசார் விட மறுக்கவே அனைவரும் கைதாவதாக கூறி அனைவரும் போலீசார் ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ஏறி கைதாகி சென்றனர்.

பாஜக.,வினரின் இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் காத்துக் கொண்டிருந்தது. பின்னர் பாஜகவினர் கைது செய்யப்பட்டதையடுத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். அதன் பிறகு வாகனங்கள் வரிசையாக கிளம்பிச் சென்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

கரூர் வரலாற்றிலேயே பாஜக.,வின் இந்த திடீர் போராட்டம் தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு, பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை சேதப்படுத்தி அதன் மீதே திமுக வினர் விளம்பரம் என்று எழுதிய திமுக வினரை இதுவரை கைது செய்யாத போலீஸார், தமிழகத்தினை ஆண்டு கொண்டிருக்கும் திமுக கட்சியின் சுவர் விளம்பரத்தினை அழிக்க முற்பட்ட போது பாஜக பிரமுகர்களை கைது செய்தது புரியாத புதிராகவே உள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், பாஜக கட்சி வரலாற்றில் கரூரில் இது போன்ற ஒரு புரட்சி தற்போது தான் நிகழ்வதாகவும் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img