kallagar3 1650339831 - 2026

பூப்பல்லக்கில் கள்ளழகர் ..

ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழாவில் இறுதி நிகழ்ச்சியாக கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான மண்டபப்படியில், பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கிருந்து தல்லாகுளம் சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பிறகு அவர் அழகர்மலை நோக்கி புறப்பட்டார்.

வழியில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மண்டகப்படிகளிலும் கள்ளழகர் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். இரவில் மூன்றுமாவடி, மறவர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்.

நாளை புதன்கிழமை அதி காலை அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக பிற்பகல் அழகர்மலை சென்றடைகிறார். மறுநாள் ஏப் 21ல் கள்ளழகருக்கு உற்சவ சாந்தி நடக்கிறது.

kallagar3 1650339831 - 2026
- 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.