health tips - 2026

அப்பாச்சி தீர்வு: குரங்கு கடி, இரத்தக்கடுப்பு, காதில்கட்டி, மார்புச்சளி, நுரையீரல் புற்றுநோய்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

குரங்கு கடிக்கு…

நன்னாரி, அவரி வேர் இரண்டையும் வகைக்கு 15 கிராம் எடுத் தரைத்து பசும்பாலில் கலக்கி மூன்று நாள்கள் உள்ளுக்குக் கொடுக்க விஷம் முறியும்.

இரத்தக் கடுப்பு சரியாக…

வாழைப்பூச் சாற்றுடன் விலாமிச்சையை சிறிது அரைத்துக் கலந்து சாப்பிட இரத்தக் கடுப்பு நிற்கும்.

நுரையீரல் புற்றுநோய்க்கு

நீர்ப்பங்கான மருந்துகளையே கொடுக்க வேண்டும். கந்தக பஸ்பத்தை பசும்பாவிலும் பேய் மிரட்டச் சாற்றிலும் கலந்து நான்கு மாதங்களாவது கொடுத்து வர வேண்டும். அந்நாள்களில் சூடில்லாத உணவு, பழச்சாறு, பால், தயிர், மோர், வெண்ணெய் இவற்றை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காதில் கட்டியா?

ரோஜாப்பூவுடன் நாலைந்து மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி இளஞ்சூடாக காதில் விட உள்ளிருக்கும் கட்டி உடைந்து உபாதையைக் குறைப்பதுடன் சீக்கிரத்தில் குணமாகும்.

குழந்தைக்கு மார்புச் சளியாக…

கொஞ்சம் வேளைப் பூவைக் கொண்டு வந்து சுத்தம் செய்து கசக்கி சாறு பிழிந்து அத்துடன் தாய்ப்பாலைக் கலந்து சிறிது சிறிதாக குழந்தைக்குப் புகட்டி வர மார்புச் சளி வரண்டு போகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.