யாரையோ காப்பாற்ற துப்பாக்கிச் சூடு: பொன்.ராதாகிருஷ்ணன்

திருச்சி: யாரையோ காப்பாற்ற ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இது கண்டனத்துக்குரியது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆந்திர போலீஸ் நினைத்திருந்தால் தமிழக தொழிலாளர்களை உயிருடன் கைது செய்திருக்கலாம். யாரையோ காப்பாற்றுவதற்காக ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால் தொழிலாளர்கள் வேலை தேடி ஆந்திரா செல்கின்றனர். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.